அப்பத்தா கண் விழிக்க குணசேகரன் கோபப்பட ரேணுகா பதிலடி கொடுக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜனனி குணசேகரனை பார்க்க ஊருக்கு சென்றுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் அப்பத்தா கண் விழிக்க நந்தினி ஈஸ்வரியை அப்பத்தா கண் விழித்துட்டாங்க சீக்கிரம் வாங்க என கூப்பிடுகிறார்.

அடுத்ததாக குணசேகரன், ஞானம் ஆகியோர் அப்பத்தாவை பார்க்க வர குணசேகரன் மதுரையில் மகராசி போல வாழ்ந்துட்டு இருந்தேன், பித்து பிடித்து பைத்தியக்கார மாதிரி இப்போ ஒத்த கை விளங்காமல் கிடக்கிறேன், இதுக்கெல்லாம் யார் காரணம் என ஆவேசப்படுகிறார்.

உடனே ரேணுகா சும்மா நடிக்காதீங்க என பதிலடி கொடுக்க யார் நடிக்கிறா என ஆவேசப்பட்டு அடிக்க பாய்கிறார். அப்பத்தா கண் விழித்ததால் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.