
குணசேகரனுக்கு செக் வைக்க உள்ளார் ஜனனி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் ஆதிரையை கூட்டிக்கொண்டு ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர் குலதெய்வ கோவிலுக்கு செல்ல குணசேகரன் கரிகாலன் மற்றும் கதிரை இவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் கரிகாலன், ஆதிரை கல்யாணத்தை கச்சிதமா நடத்தி முடிக்கணும்னு உஷாரா இருக்காரு. அதுக்காக ஒரு தண்டத்தையும் ஒரு கண்டத்தையும் எங்களோட அனுப்பி வெச்சி இருக்காரு என்று பேசுகிறார்.
கரிகாலன் காரில் அமர்க்களம் செய்து வர அவனை எப்படியாவது கழட்டி விட வேண்டும் என நந்தினி ஒரு திட்டத்தை சொல்ல ரேணுகா நீ கொடுக்கிற பண்ணியே அவ முதல்ல குடிக்கணும்னு என்று சொல்ல ஜனனி நான் ஒரு பிளான் வச்சிருக்கேன் என்று சொல்கிறார்.
இதனால் ஜனனி கரிகாலனை கழட்டி விட்டு குணசேகரனுக்கு செக் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
