ஜீவானந்தத்தை தேடிப்போன ஜனனிக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் கதிர் தங்காவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது நீ குற்றாலத்தில் ஆட்டம் போட்டது தெரியும், அண்ணனுக்கு தெரியாம ரெண்டு நாள் ஜெயில்ல இருந்தது தெரியும் என சொல்லி கதிருக்கு ஷாக் கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து ஜனனி ஒரு பெரியவரை சந்தித்து ஜீவானந்தம் பற்றி விசாரிக்க நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நினைச்ச உடனேயே அவரை சந்திக்க முடியாது என்று சொல்ல அவரை பார்க்காமல் நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என நிற்கிறார்.