விசாலாட்சியை போட்டு கொடுத்துள்ளார் ஜான்சி ராணி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஆதிரை, கரிகாலன் கல்யாணத்துக்காக எல்லோரும் மண்டபத்தில் கூடியுள்ள நிலையில் நேற்றைய எபிசோட் செம கலகலப்பாக கலாட்டாவாக சென்றது.
இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ஒய்யாரமாக உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டிருக்கும் ஜான்சி ராணி நேற்று ராத்திரி மருமகளை பாக்கலாம்னு ரூமுக்கு போனா உன் ஆத்தா காரி அந்த கத்து கத்துறா என்னானு கேளு என குணசேகரனிடம் கோல் மூட்டுகிறார்.
இந்த சமயம் பார்த்து ரூமில் இருந்து விசாலாட்சியும் வெளியே வருகிறார். இதனால் குணசேகரன் என்ன செய்ய போகிறார்? கல்யாணத்தில் நடக்க போவது என்ன என்ற திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.