
ஜனனி வெறுப்பேற்ற குணசேகரன் வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் ஆதிரை, கரிகாலன், ஜான்சி ராணி ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருக்க ஒரு பக்கம் குணசேகரன், கதிர், ஞானம் ஆகியோர் நின்று கொண்டிருக்க இன்னொரு பக்கம் ஜனனி, ரேணுகா ஆகியோர் நின்று கொண்டிருக்கின்றனர்.
ஜனனி நல்லா சாப்பிடு ஆதிரை அப்ப தான் நாளைக்கு போட்டோவுக்கு ஒழுங்கா போஸ் கொடுக்க முடியும் என்று சொல்ல ரேணுகா படக்குனு தூங்கிடு அப்ப தான் நாளைக்கு நல்லா இருக்கும், நானும் போட்டோவை தான் சொன்னேன் என ரேணுகா பேசுகிறார்.

இதை கேட்ட குணசேகரன் இதையெல்லாம் நம்பாதீங்க, ஆதிரை கழுத்துல கரிகாலன் தான் தாலி கட்டணும், வேற ஏதாவது நடந்தது நடக்கிறதே வேற என வார்னிங் கொடுக்கிறார்.