
தம்பிகளுடன் சேர்ந்து குணசேகரன் திட்டம் தீட்டுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மண்டபத்தில் ஜனனி, நந்தினி, ஆதிரை, ரேணுகா ஜனனியின் தோழி வாசு என எல்லோரும் ஒரே ரூமில் இருக்கும் போது நந்தினி இந்த வீட்ல இருக்கவங்க எல்லாரும் தான் மட்டம் தட்டுறாங்கன்னா இவளும் இப்படி பேசுவது கஷ்டமாக இருக்கிறது என கண் கலங்க ஜனனி அவ ஏதோ காமெடிக்கு சொன்னா என ஆறுதல் கூறுகிறார்.

அடுத்து வீட்டில் குணசேகரன் தம்பிகள் ஞானம் மற்றும் கதிரை கூப்பிட்டு வைத்து பேச கதிர் எல்லார் முன்னாடியும் கையெழுத்து போடணும்னா அசிங்கமா இருக்காது என கோபப்பட எவன் அசிங்கப்படுத்தினானோ அவன் முன்னாடியே நெஞ்ச நிமித்துக்கிட்டு நிக்கணும் அதுக்கு என்ன பண்ணனும் அதை பண்ணனும் என சொல்கிறார்.

இதனால் ஆதிரையின் நிச்சயதார்த்தத்தில் குணசேகரன் ஏதோ பெரிய வேலை செய்யப் போகிறார் என்பது தெரிய வருகிறது. இதனால் இன்றைய எபிசோட் ஆனால் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.