வலிமையுடன் பிரபல நடிகரின் தமிழ் படம் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etharkum Thuninthavan Clash With Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் வலிமை. கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு படக்குழு அதிர்ச்சி கொடுத்தது‌. ‌‌

விவசாயிகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

இருப்பினும் பொங்கலுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை என்பதால் வலிமை படத்தின் வசூல் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த படத்தோடு தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Jai Bhim படம் பார்த்தேன்…என்னா படங்க?? – Prabhu Deva Bold Speech..! | Thel Press Meet | Suriya HD

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கல் ரிலீசாக வலிமை படத்துடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.