Eshwaran Trailer

ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Eswaran Official Trailer : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நீ அழிக்க வந்த அசுரன்னா நான் காக்க வந்த ஈஸ்வரன்டா - மிரட்டலாக வெளியான ஈஸ்வரன் ட்ரைலர், சும்மா அதிருதில்ல.!!

இந்த திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக வெளியாக உள்ளது. மேலும் இன்று மாலை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரில் மாசான பஞ்ச் டயலாக்குகள் இடம்பெற்றிருப்பதால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.