மக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என ஓட்டளித்த பிறகு சொந்த ஊரில் பேட்டியளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

EPS Speech After Casting Vote : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

கொரொனோ தொற்று வழிமுறைகளை பின்பற்றி கையுறைகளை அணிந்து பொது இடைவெளியுடன் வரிசையில் சென்று வாக்களித்தார். முன்னதாக முதலமைச்சர் தனது இல்லத்தில் தாயார் தவசியம்மாள் மற்றும் மறைந்த முதலவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மக்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் - சொந்த ஊரில் ஓட்டளித்த பிறகு முதல்வர் பழனிசாமி பேட்டி.!!

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் பழனிசாமியை போலவே அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடியில் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.