![images - 2024-06-11T123604.624](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-11T123604.624.jpeg)
உலக அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது எலன் மஸ்க் வெளியிட்ட பதிவு.
உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார் எலன் மஸ்க். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி கலாய்க்கும் வகையிலும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் தொடர்ந்து பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/20240611_123952.jpg)
அந்த வகையில் தற்போது AI தொழில்நுட்பம் குறித்து கலாய்க்கும் வகையில் பதிவு செய்துள்ளார். இதற்காக பீம் மெட்டீரியலாக தமிழ் பட போஸ்டர் ஒன்றை பயன்படுத்தி உள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர் என வலம் வந்து கொண்டிருக்கும் துரை சுதாகர் நடிப்பில் வெளியான தப்பாட்டம் பட போஸ்டரை தான் பயன்படுத்தி உள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த அருண் விஜய் இது தமிழ் பட போஸ்டர் என பெருமிதம் கொண்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/IMG-20240611-WA0017.jpg)
மேலும் துரை சுதாகரும் தனது பட போஸ்டரை பயன்படுத்திய எலன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.