எட்டு வருடமாக காதலித்து வந்த நடிகருடன் சுந்தரி சீரியல் நடிகைக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 

Sundari Serial Sree Gopika in Engagement Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இது சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ கோபிகா.

தற்போது சுந்தரி சீரியல் இவரது கேரக்டர் இடம் பெறாத நிலையில் அன்பே வா சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் வைஷாக் ரவி என்ற நடிகருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 

இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமணம் என ஸ்ரீ கோபிகா தெரிவித்துள்ளார். 

இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

https://www.instagram.com/p/C7_ynpJt9G3/?igsh=NzR4OHpvZ2N0cm91
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.