Draupathi
பரபரப்பான தருணத்தில் திரௌபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Draupathi Movie Release Date : பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. நாடக காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

இப்படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் சமமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குனர் மோகன் ஜி இப்படம் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார், மேலும் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.