DMK vs AIADMK Moves on NEET
DMK vs AIADMK Moves on NEET

நீட் தேர்வுக்கு 2010 ஆம் ஆண்டு மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் ஒப்புதல் அளித்த நிலையில் திமுக மற்றும் அதிமுக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

DMK vs AIADMK Moves on NEET : டிசம்பர் 21, 2010 – திமுகவின் ஆதரவைப் பெற்று மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டு அறிவிப்புகள் மூலமாக நீட் தேர்வை முன்மொழிந்தது.

· டிசம்பர் 21, 2010 தேதியில் medical council of india (mci) வெளியிட்ட நீட் தேர்வுக்கான அறிவிப்பை, அப்போது கூட்டணியிலிருந்த திமுகவும், அவர்களின் 8 அமைச்சர்களும் எதிர்க்கவில்லை. அவர்கள் ஊழல் செய்வதிலும், செய்த ஊழலை மறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.

· டிசம்பர் 2010, பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

· ஜூலை 18, 2013 mci யின் நீட் தொடர்பான அறிவிப்பை, அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்கள், பின் தங்கிய மாணவர் சேர்க்கைக்கு எதிராகச் செயல்படும் என்பதால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஒத்தி வைத்தது.

· திமுகவின் ஆதரவைப் பெற்று மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அதனை எதிர்த்து மறு ஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. தமிழ் மாணவர்களுக்கு எதிரான இந்த மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியை, கூட்டணியிலிருந்ததால் தனது சுய லாபத்திற்காக திமுக எதிர்க்கவில்லை.

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடும் முதல்வர் பழனிச்சாமி – சட்டசபையில் காரசாரமான வாக்குவாதம்.!!

· மார்ச் 2016 – ஐக்கிய முற்போக்கு கூட்டணி தாக்கல் செய்த நீட் தொடர்பான மறு ஆய்வு மனுவை, திரும்பபெற, அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அன்றைய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

· ஏப்ரல் 11, 2016 *2013 ஆம் ஆண்டில் நீட் தேர்வு தொடங்குவதற்கான தடை விதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றது.

· 2016 – 2017 கல்வியாண்டில் நடைபெற வேண்டிய நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்தது.

· முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, டிசம்பர் 2016ல் நடைபெற்றது.

· மே 24, 2016- கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இழைக்கப்பட இருந்த அநீதியை, தனது நடவடிக்கைகளால் தடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

· ஜனவரி 31 , 2017- மாநில சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவர்கள், நீட்டுக்கு எதிராக ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார். மற்றொரு மசோதாவில், மாநில அரசு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு வாயிலாக இல்லாமல், தகுதித்தேர்வு மூலமாகப் பெறப்படும் மதிப்பெண்களை வைத்தே தீர்மானிக்கப்படும் என்று மாநில அரசு வேண்டுகோள் வைத்தது. இந்த இரண்டு மசோதாக்களும் ஒரு மனதாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

· ஜூன் 25, 2017 அன்று 2017- 18 நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் குறைவான தேர்வு விகிதத்தால், மாநிலங்களுக்கான இடங்களில் 85 % state board மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று, மாநில அரசு ஒரு ஆணையைப் பிறப்பித்தது.

· ஜூன் 27, 2017 – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு, நீட்-க்கு எதிரான சட்டமன்ற தீர்மானத்திற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் ஏன் வழங்கப்படவில்லை என்று மத்திய அரசை நோக்கி வினவியது.

· ஜுலை 14, 2017- 85% இட ஒதுக்கீட்டை உள்ளடக்கிய அரசாணையால் கோபமடைந்த சில மாணவர்கள், அதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆணையை ரத்து செய்தது. இந்த வழக்கில் திமுகவின் கூட்டணியிலிருந்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி, நளினி சிதம்பரம், சிபிஎஸ்சியில் பயிலும் மாணவர்களுக்காக (மனுதாரர்கள்) ஆஜராகிய முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர்.

· ஜூலை 19,2017 – அதிமுக ராஜ்யசபா உறுப்பினர்கள், தமிழ்நாடு மாணவர்களுக்கு, நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் கோரிக்கை வைத்தனர்.

· ஜூலை 20, 2017 – தமிழக அமைச்சர்கள் குழு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்களை தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிப்பதற்காகச் சந்தித்தது. அந்த அமைச்சர்கள் குழு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும், அது இப்போது மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாகவும், பிரதமருக்கு ஒரு அறிக்கை கொடுத்தனர்.

நீட் தேர்வுக்கு யார் காரணம்?? – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

· ஆகஸ்ட் 2, 2017 – தமிழகத்துக்கு நீட் விலக்கு வேண்டும் என்று, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், திரு.விஜயபாஸ்கர், மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஆகஸ்ட் 2ல் சந்தித்தார்.

· ஆகஸ்ட் 14, 2017 – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், திரு.விஜயபாஸ்கர், 2017ல் நீட் விலக்குக்காக ஒரு ordinance மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக அரசு, நீட்-க்கு எதிராக அவசரச் சட்டம் கொண்டு வந்தால், அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில், தமிழ்நாட்டுக்கு ஒரு வருடத்திற்கு, விலக்கு அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது.

· ஆகஸ்ட் 16, 2017 – ல் சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலுடன் ஆலோசனை செய்து, தமிழக மாணவர்கள் நீட்டிலிருந்து, விலக்கு அளிப்பதற்கான, தமிழக அரசின் அவசரச் சட்டத்தை அனுமதித்தார். ஏற்கனவே, தமிழக அரசின் 85% இட ஒதுக்கீட்டை எதிர்த்த, சில சிபிஎஸ்சி மாணவர்கள், மாநில அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் அவர்களை அணுகினர்.

· ஆகஸ்ட் 17, 2017 ல் உச்சநீதிமன்றம், மருத்துவ மற்றும் பல் மருத்துவத்திற்கான மாணவர் சேர்க்கை செயல்முறையை நிறுத்தியது.

· ஆகஸ்ட் 22, 2017- தமிழகத்திற்கு ஒரு பின்னடைவாக, அனைத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவத்திற்கான மாணவர் சேர்க்கை, நீட் மூலமாக மட்டுமே நடைபெறும் என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மத்திய அரசு, தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்திற்கு துணை போக முடியாது என்றும் , அப்படிச் செய்தால், அது பிற மாநிலங்கள், நீட்-ஐ புறக்கணிப்பதற்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விடும் என்றும் கூறியது.

· ஜூலை 17, 2019- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இந்த பிரச்சனையை விவாதிக்க, ஒரு சிறப்பு அமர்வுக்கு தன்னுடைய அரசாங்கம், தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக அரசு இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் விளக்கம் கோரிய பின், சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று தெரிவித்தார்.

மாநில அரசின் மருத்துவ முதுநிலைப் படிப்பு உள் ஒதுக்கீடு விவகாரம் – அதிமுக அரசால் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்!(Opens in a new browser tab)

· தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், மத்திய அரசிடமிருந்து, மசோதாக்களின் நிலைப்பாட்டைப் பற்றி, 12 நினைவூட்டல்களுக்கு பின்பும், மாநில அரசுக்கு எந்த ஒரு செய்தி தொடர்பும் வரவில்லை என்று தெரிவித்தார்.

· செப்டம்பர் 15, 2020- நீட்டில் தேர்ச்சி பெற்று இடம் கிடைக்காத, அரசுப் பள்ளி மாணவர்கள், இளநிலை மருத்துவப்படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு வழங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றியது.

ஆனால் தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வந்த போது சுயலாபத்திற்காக வாய் திறக்காத திமுக தற்போது மாநில அரசு எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டி வருவது தான் பலருக்கு வேடிக்கையான ஒன்றாக இருக்கிறது.