Eps Angry

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பதிமூன்று தற்கொலைக்கு திமுகவில் காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

Edapadi Palanisamy About Neet Controversy : தமிழக சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூடியுள்ளது. அவை கூடியதும் அமைச்சர் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

நேற்று நடந்த சட்டப் பேரவையில் திமுக நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து விவாதிக்க வேண்டும் என மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கருணாநிதி முதல்வராக இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டுவரப்படவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து நீட் தேர்வு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நீட் தீர்வை மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கொண்டு வந்த போது அவர்களது கூட்டணியில் திமுக இருந்ததா? இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சிதான். தமிழகத்தில் அதிமுக அரசு நீட் தேர்வு வேண்டாம் என உறுதியாக இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வரைச்சென்று நீட் கட்டாயம் என்ற தீர்ப்பை பெற்றது காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான திமுகவும் தான் என கூறியுள்ளார்.

பா. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் இந்த தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் நீட் தேர்வு குறித்து பேச காங்கிரஸ் மற்றும் திமுக விற்கு எந்தவித அருகதையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பழக்கம் திமுகவிற்கு கைவந்த கலை என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரசாரமான விவாதங்களால் சட்டப்பேரவை பரபரப்பாகியுள்ளது.

அதேபோல் திமுக கட்சியை சேர்ந்த கே என் நேரு என்பவர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கட்டாயம் ஒழிப்போம். அப்படி ஒழிக்க முடியாவிட்டால் நான் அவர்களை காப்பியடிக்க செய்வோம் என பேசி
இருந்தார். இவருடைய இந்த பேச்சு தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.