Valimai
பொருளாதார பிரச்சனையில் சிக்கி கொண்ட வலிமை படத்திற்கு தற்போது அடித்துள்ள ஜாக்பாட்டால் தயாரிப்பாளர் குஷியாகியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவரான தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை போனி கபூரும் ஜீ நெட்ஒர்க்கும் இணைந்து தயாரித்து வந்தன, சமீபத்தில் சில பிரச்சனையால் ஜீ நெட்ஒர்க் இந்த படத்தில் இருந்து விலகி கொள்ள போனி கபூர் பொருளாதார பிரச்சனையில் சிக்கி கொண்டார்.

இதனால் படப்பிடிப்புகளும் பாதியிலேயே நின்று விட்டன, இந்நிலையில் அஜித், வினோத் கூட்டணி மீதுள்ள நம்பிக்கையால் தமிழகத்தை சேர்ந்த 3 விநியோகிஸ்தர்கள் போனி கபூரை சந்தித்து தமிழக ரிலீஸ் உரிமையை எங்களுக்கு தருவதாக இருந்தால் அட்வான்ஸாக நாங்கள் ரூ 30 கோடி தருகிறோம் என கூறியுள்ளனர்.

போனி கபூரும் இந்த டீலுக்கு ஓகே சொல்லி ரூ 30 கோடியை பெற்று கொண்டு படத்தை மீண்டும் துவக்க உள்ளார். பணம் இல்லாமல் சிக்கி தவித்த படக்குழுவிற்கு விநியோகிஸ்தர்கள் செய்துள்ள இந்த உதவி ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.