ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க, இயக்குனர் ஷங்கர் ஆர்வம்..
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘பயோபிக்’ குறித்து, இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த திரையார்வம் பார்ப்போம்..
இயக்குனர் ஷங்கர் தான் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படம் தற்போது ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பேசியுள்ளார். அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் வேள்பாரி படங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ‘பயோ பிக்’ திரைப்படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து ஷங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யோசிக்காமல் உடனடியாக ரஜினிகாந்தின் ‘பயோபிக்கை’ தான் உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பயோபிக் எடுக்கும் எண்ணம் எதுவும் இதுவரை வரவில்லை. எடுத்தால் ரஜினியின் பயோபிக்கைதான் (வாழ்க்கை வரலாற்றை) எடுக்க வேண்டும்.
ரஜினிகாந்தின் வாழ்க்கை குறித்து அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படத்தை எடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தால் மேலும் பெருமையாக உணர்வேன்.
இந்த பயோபிக்கில் யார் நடிப்பார்கள் என முடிவு செய்யவில்லை.
ரஜினி பற்றிய பயோபிக் எண்ணமே தற்போதுதான் எனக்கு தோன்றியிருக்கிறது. நடக்கும்போது இதுகுறித்து யோசிக்கலாம்.
இந்தியாவில் மட்டுமில்லாமல் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினி -ஷங்கர் காம்பினேஷன் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளன. இந்நிலையில், ரஜினியின் பயோபிக்கை எடுப்பேன் என்று ஷங்கர் கூறியுள்ளது இமாலய கவனத்தை ஈர்த்து, வைரலாகி வருகிறது. எதிர்பார்ப்போம்.!