வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி: செல்வராகவன் பாராட்டு..

Web Ads

செல்வராகவன் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்.’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

முன்னதாக, தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ‘இட்லி கடை’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த செல்வராகவன் தெரிவிக்கையில், ‘இட்லி கடை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது ! வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி’ என தெரிவித்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான இப்படத்தில் சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, இளவரசு உள்பட பலர் தனுஷுடன் நடித்திருந்தனர். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார். இதன் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

director selvaraghavan hails dhanush idly kadai film
director selvaraghavan hails dhanush idly kadai film