சிம்பிளாக நடந்து முடிந்த இயக்குனர் பொன் குமார் திருமணம்.. போட்டோ இதோ.!!
இயக்குனர் பொன் குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் 1947 ஆகஸ்ட் 16 என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் என. எஸ் பொன் குமார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதாவது மார்ச் இரண்டாம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ்கலங்களில் உள்ள மாரியம்மன் கோவில் ஒன்றில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.
அவரது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
