YouTube video

Director John Mahendran About Thalapathy‘s Sachein-2 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்று சச்சின்.

விஜய், ஜெனிலியா, வடிவேலு, தாடி பாலாஜி என கலக்கலான கூட்டணியுடன் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரனிடம் சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

ஹீரோ கூட இல்லை.. விஜய்யின் விஜய் மகன் சஞ்சய்யின் ஆசை இதுதான் – முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்!அதற்கு பதிலளித்துள்ள ஜான் மகேந்திரன் ரசிகர்கள் அனைவரும் சச்சின் படத்தை இன்று வரை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜயை பார்க்க நானும் ஆவலுடன் உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் சச்சின் போன்ற படத்தில் விஜய் மீண்டும் நடித்தால் நன்றாக இருக்கும். அப்படி ஒரு படத்தை நான் இயக்கினாலும் சரி வேறு ஒரு இயக்குனர் இயக்கினாலும் சரி அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.