டுவிட்டரில் இணைந்துள்ளார் பாலாவின் முதல் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Director Bala 1st Tweet : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.

ட்விட்டரில் இணைந்த பாலா.. முதல் ட்வீட்டே செம - என்ன கூறியுள்ளார் பாருங்க.!!

இதுவரை எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லாத இவர் தற்போது முதல் முறையாக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ட்விட்டரில் இணைந்ததுமே ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என கூறி இருந்தீர்கள். இது தவிர்க்க முடியாதது.

தங்களின் ஆற்றல், செயல், பண்பான நடவடிக்கை அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம். நன்றி என தெரிவித்துள்ளார். பாலாவின் இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்து லைக்குகள் குவிந்து வருகின்றன.

ட்விட்டரில் இணைந்த பாலா.. முதல் ட்வீட்டே செம - என்ன கூறியுள்ளார் பாருங்க.!!