Director Babu Sivan Passes Away
Director Babu Sivan Passes Away

தளபதி விஜயின் வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Director Babu Sivan Passes Away : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வேட்டைக்காரன்.

விஜய் மற்றும் அனுஷ்கா ஆகியோர் ஜோடி பெண் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குனர் பாபு சிவன் என்பவர் இயக்கியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த குருவி படத்தின் வசனங்களை எழுதியிருந்தார்.

இவர் உடல்நிலை குறைபாடு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவைத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிப் படமான வேட்டைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தது வேதனை அளிக்கிறது என விஜய் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.