ரசிகர்கள் எதிர்பார்க்காத புது ட்விஸ்ட்டாக துணிவு திரைப்படத்தை கைப்பற்றியுள்ளார் தில் ராஜு.

Dil Raju Released Thunivu in Telungu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரானின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு போட்டியாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.

வாரிசு திரைப்படத்தின் சில பகுதிகளின் வெளியீட்டு உரிமையை உதயநிதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே போல் தெலுங்கானாவில் நிசாம் மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளில் துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை தில் ராஜீ கைப்பற்றியுள்ளார்.

இந்த விஷயங்கள் திரையுலகில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.