Dhruva Natchathiram climax shoot is pending
Dhruva Natchathiram climax shoot is pending

Dhruva Natchathiram climax shoot is pendingதுருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் இன்னும் எடுத்து முடிக்கப்படவில்லையாம். அதனால்தான் படம் இன்னும் ரிலீஸாகவில்லையாம்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

தளபதி 64 படத்துக்குமுன் இளம் இயக்குனர் போட்ட மாஸ்டர் பிளான் – அதிரடி அப்டேட்!

இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களை ஆரம்பித்து கிடப்பில் போட்டிருக்கும் கௌதம், இதே வேளையில் வலைத் தொடர் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

இதில் எனை நோக்கி பாயும் தோட்டா பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி வருவது எல்லோருக்கும் தெரியும்.

துருவ நட்சத்திரம் படத்துக்கு என்ன பிரச்னை என்றால் இப்படத்தின் கிளைமாக்ஸ் இன்னும் எடுத்து முடிக்கப்படவில்லையாம். அதனால்தான் படம் இன்னும் ரிலீஸாகவில்லையாம்.