ஸ்டைலிஷ் லுக்கில் துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அப்பா விக்ரமுடன் இணைந்து கார்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நடித்தார்.
அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடியை மையமாகக் கொண்டு உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் மாரி செல்வராஜ் பட லுக்கா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.