Dharala prabhu Teaser
தாராள பிரபு படத்தின் டீஸர் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது தாராள பிரபு படத்தில் நடித்து வருகிறார். இது ஹிந்தியில் வெளியாகி ஹிட்டடித்த விக்கி டோனர் படத்தின் ரீமேக் தான்.

இந்த படத்தை அறிமுக இயக்குனரான கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தடம் ஹீரோயின் தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் விவேக் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. விவேக்கின் பூஜையில் தொடங்கி ஹரிஷ் கல்யாணின் ஆட்டத்தில் இந்த டீஸர் முடிகிறது.

விந்தணு பேங்க் நடித்தி வருகிறார் விவேக், இங்கு ஹரிஷ் கல்யாண் விந்தணுவை தானம் செய்து ஊருக்கே குழந்தை கொடுக்கிறார். இது தான் படத்தின் கதை என்பதும் தெரிய வருகிறது.

டீசருக்கு இடையில் தனுஷ் ரசிகர்களுக்கும் வலை வீசியுள்ளார் ஹரிஷ் கல்யாண். இந்த டீஸர் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.