நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாத்தி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நேரடியாக வெளியாக இருக்கும் இப்படத்தில் தனுஷ் எழுதி ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கிராமத்து குத்து பாடலாக உருவாகி இருக்கும் முதல் பாடல் வரும் நவம்பர் 10ஆம் தேதியான இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்ததை தொடர்ந்து இது குறித்து சிறப்பு வீடியோவையும் அண்மையில் ஜிவி பிரகாஷ் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வாத்தி திரைப்படத்தின் எஸ்கியூஸ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த தனுஷ் ரசிகர்கள் அப்புகைப்படங்களை இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.