Dhanush Sister Karthika Interview
Dhanush Sister Karthika Interview

தனுஷின் அக்கா கார்த்திகா தனுஷ் பற்றிய பலருக்கும் தெரியாத தகவல்களை கூறியுள்ளார்.

Dhanush Sister Karthika Interview : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் தனுஷ். இவர் இயக்குனர் செல்வராகவனின் உடன்பறந்த தம்பி என்பது அனைவரும் அறிந்ததே.

சிவகார்த்திகேயன் தான் நடிக்கணும் என அடம்பிடித்த தனுஷ் – எதிர்நீச்சல் படம் பற்றிய ரகசியத்தை உடைத்த இயக்குனர்.!

தனுஷிற்கு செல்வராகவன் மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். அதில் ஒருவர்தான் கார்த்திகா.

மகப்பேறு மருத்துவராக இருந்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாகப் பேசி இருந்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு தாய்மாமன் மடியில் தனது குழந்தைகளை அமர வைத்து மொட்டையடித்து அழகு பார்த்தார்.

இந்தநிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எங்களுக்கு எங்கள் அண்ணன் செல்வராகவன் தான் ட்ரெண்ட் செட்டர் என கூறியுள்ளார்.

தளபதி 65 படம் நிச்சயம் வெறித்தனமா இருக்கும்.. ஏனென்றால்?? – பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

மேலும் தனுஷ்க்கு நடிகனாக வேண்டும் என்ற ஆசை இல்லை அவர் செஃப் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்.

ஆனால் அவர் ஒரு பிறவி நடிகர் என்பது தற்போது தான் தெரிகிறது. தனுஷ் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என நினைத்தால் அதை முழுமையாக செய்வார் அதுதான் அவரின் வெற்றிக்கு காரணம்.

தனுஷ் வித்தியாச வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என கூறியுள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்ப்பது தனுஷின் புதுப்பேட்டை 2 படத்தைத்தான். இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.