நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தில் சிம்பு பட நடிகை நடிக்க உள்ளார்.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து டாப் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது.

தனுஷுடன் இணைய இருக்கும் சிம்பு பட நடிகை!!… வைரல் தகவல் இதோ!.

இதனைத் தொடர்ந்து அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷுடன் இணைய இருக்கும் சிம்பு பட நடிகை!!… வைரல் தகவல் இதோ!.

அதாவது நடிகர் தனுஷ் கிரகணம், பியார் பிரேமா காதல் ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக திகழும் இயக்குனர் இளநனின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். வித்தியாசமான காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சித்தி இட்னானி இப்படத்தில் தனுஷ் உடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இது குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.