சிக்கல்களுக்கு பயந்து விஜய் விட்டதை கையில் எடுத்துள்ளார் நடிகர் தனுஷ்.

Dhanush in Vijay Movie Title : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட திரைப் படங்கள் வெளியாக உள்ளன. இந்த படம் மட்டும் அல்லாமல் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி ஒரு படம் பார்த்து – திரை பிரபலங்கள் கொண்டாடும் Anandham Vilayadum Veedu.!

மேலும் இதில் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்குவில் சார் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

புரோ கபடி போட்டி : சாம்பியன் அணியை, உ.பி.அணி வீழ்த்தியது எப்படி? களவிவரம்..

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்கு முதலில் வாத்தி என்று தான் டைட்டில் வைக்கப்பட்டது. சில சிக்கல்கள் ஏற்படும் என பயந்துதான் கடைசியில் மாஸ்டர் என டைட்டில் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த டைட்டிலில் தனுஷ் நடிக்க இருப்பது ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் குவித்துள்ளது.