தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது. ‌

Dhanush in Upcoming OTT Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்.. OTT-ல் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ்

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இந்தப் படம் வரும் மே 14-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‌‌ கர்ணன் திரைப்படத்தின் OTT ரிலீஸை தொடர்ந்து ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஜூன் 18ல் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து 2 தனுஷ் திரைப்படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் மூழ்கடித்துள்ளது.