Dhanush in Karthik Thangavel Direction

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் டஜன் கணக்கில் படங்கள் உருவாக உள்ள நிலையில் இன்னொரு படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush in Karthik Thangavel Direction : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியதும் கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43 படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார், வெற்றிமாறன், செல்வராகவன் இயக்கத்தில் 3 திரைப்படங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என கிட்டத்தட்ட டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இத்தனை படங்களை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.