தனுஷின் D51 திரைப்படம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளுடன் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது அடுத்த படமான “டி50” திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் போஸ்டருடன் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் 51 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமலா இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படம் குறித்த அதிகாரிவபூர்வமான போஸ்டரை பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் அப்போஸ்டரில் இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படக்குழுவினர் வெளியிட்டு இருந்த டீசர் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வரும் நிலையில் இந்த போஸ்டர் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.