தனுஷ் படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் இப்படத்தில் தனக்கான படப்பிடிப்பை நடிகர் தனுஷ் நிறைவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க இருக்கும் “D50” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு சமீபத்தில் போஸ்டருடன் அறிவித்திருந்தது. இதில் தனுஷ் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் அண்ணனும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு தனுஷை அறிமுகம் செய்த செல்வராகவன் தற்போது தம்பி தனுஷின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.