திரையுலகில் 21 ஆண்டு நிறைவு செய்திருக்கும் நடிகர் தனுஷின் காமன் போஸ்டர் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட் வரை நடித்து மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வரும் தனுஷ் இருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் காமனான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை குவித்து சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.