ஏப்ரல் 9-ல் கர்ணன் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Dhanush Clarification on Karnan Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர், டிரைலர், போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

ஏப்ரல் 9-ல் கர்ணன் ரிலீஸாகுமா?? தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்ஸ்

படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரானா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கி இருப்பதால் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

இப்படியான நிலையில் தற்போது கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரிலும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 9-ல் கர்ணன் ரிலீஸாகுமா?? தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்ஸ்