Dhanush About Master Movie Release

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து தனுஷ் அதிரடியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Dhanush About Master Movie Release : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தியில் மட்டும் இப்படம் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அறிவிப்பு குறித்து ரசிகர்கள் திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து பதிவிட்டுள்ளார். மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவது மகிழ்ச்சி. நானும் குடும்பத்தோடு இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மாஸ்டர் திரைப்படத்தின் மூலமாக திரையரங்குகள் கலாச்சாரம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். திரையரங்குகள் இல்லை என்றால் சினிமா இல்லை என பதிவிட்டுள்ளார்.

இதோ அவருடைய பதிவு