Dev Suriya

Dev Suriya : சூர்யாவின் மகன் தேவ் குறித்த தகவலுக்கு 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் மகன் திரையுலகில் நடிகராக அறிமுக இருப்பதாகவும் அறிமுக இயக்குனரின் கதையில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அப்பாவை போலவே இருக்கும் சஞ்சய் – இணையத்தில் வைரலாகும் குறும்படம்.!

மேலும் இது நாய்க்கும் சிறுவனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் படமாக இருக்கும் எனவும் இந்த கதை பிடித்து போகவே சூர்யா ஜோதிகா தேவ்வை நடிக்க வைக்க ஒப்பு கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த தகவல் முற்றிலும் பொய்யானது, தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது சூர்யாவின் மகன் தேவ்வை திரையில் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.