பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை.. திரிஷா ஓபன் டாக்.!!
பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை என்று திரிஷா பேசியுள்ளார்.

Desire to act with a famous actor Trisha Open Talk
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மணிரத்தினம் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் த்ரிஷாவிடம் எந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சந்தேகமே வேண்டாம் எனக்கு பகத் பாசில் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அவர் எந்த மாதிரியான கதைகள் இருந்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார்
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Desire to act with a famous actor Trisha Open Talk