VRV Vs DD2 Collection : சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தின் 10 நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் வந்தா ராஜாவாக தான் வருவேன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சிம்புவின் படத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. சந்தானம் ஹீரோவாக நடித்து தயாரித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனால் இதுவரை சிம்பு படம் பெற்றுள்ள வசூலை விட தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் அதிகமான வசூலை பெற்றுள்ளது.

ஆம், ஏற்கனவே சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் திரைப்படம் இதுவரை வெறும் 10.05 கோடி தான் வசூலை பெற்றிருப்பதாக தகவல் கிடைத்திருந்தது.

ஆனால் தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் வெறும் 10 நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.