டிடி நெக்ஸ்ட் லெவல் : ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

dd next level movie ott release date update
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி இருந்தது.
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்திலும், ஆர்யாவின் தயாரிப்பிலும் உருவான இந்த படத்தில் கஸ்தூரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வருகிற 13-ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
This ain’t a horror movie. It’s a horror movie inside a horror movie. 😵💫🎞️
2025's Biggest Horror Comedy Blast #DDNextLevel will be streaming from June 13th on ZEE5! @iamsanthanam @arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001… pic.twitter.com/lFrri9oFfu
— ZEE5 Tamil (@ZEE5Tamil) June 10, 2025