COVID19 Update 29.05.20
COVID19 Update 29.05.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID19 Update 29.05.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 141 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

தளபதி விஜயை பார்க்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரானா நிதியாக கொடுத்த 12 வயது சிறுவன் – குவிந்து வரும் பாராட்டு.!

மேலும் தமிழகத்தில் இன்று 9 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 11,313 ஆக உயர்ந்திருப்பது நிம்மதி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,68,035 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 71,544 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4717 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.