தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID19 Update 06.08.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 5,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

தமிழகத்திற்கு கைகொடுத்த பிளாஸ்மா சிகிச்சை.. இதுவரை எவ்வளவு பேர் குணமடைந்துள்ளனர்? – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,21,087 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 6272 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பிளாஸ்மா சிகிச்சை மூலம் 57 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்.

இன்று 110 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,571 ஆக உயர்வு.

தற்போது 53,480 பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரானா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.