57 Patients Recovered By Plasma Treatment in Tamilnadu
57 Patients Recovered By Plasma Treatment in Tamilnadu

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சிறந்த முடிவை கொடுத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

57 Patients Recovered By Plasma Treatment in Tamilnadu : தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு ஒரு நாள் வைரஸால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் துரித நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளது.

மேலும் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எடுத்து வரும் தகுந்த நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மேலும் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை பிளாஸ்மா சிகிச்சையின் மூலமாக 57 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரானா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அனைத்து தாலுகாக்களிலும் கொரானா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான கொரானா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.