Corona Tests Details in South Tamil Nadu
Corona Tests Details in South Tamil Nadu

கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நடக்கும் மொத்த பரிசோதனைகளுக்கு இணையாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொரானா பரிசோதனை நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது‌.

Corona Tests Details in South Tamil Nadu : இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரானா சமூக பரவலாக மாறி விட்டதாக கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு கொரானா பரிசோதனைகளில் அதி வேகமாக செயல்பட்டு வருகிறது.

அதாவது சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிப்பது, அதனை மேம்படுத்துவதன் மூலமும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமும் முழு மாநிலத்திலும் கொரோனா தொற்றுநோய் பரவுவதை சமாளிக்க தமிழக அரசு வலுவான திட்டங்களை உருவாக்கியுள்ளது.

தலைவனுக்கு ஏற்ற ரசிகர்கள்.. 100 நாட்களாக தொடரும் சூர்யா ரசிகர்களின் செயல் – குவியும் வாழ்த்துக்கள், என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?

அதாவது பாதிக்கப்பட்டோரின் தொடர்பு தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் இயக்கத்திற்கான TN ePASS அமைப்பு, கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் ஹாட் ஸ்பாட்களை நிர்வகிப்பதற்கான GIS ஆதரவு தெற்கு மாவட்டங்களில், மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதல் உள்கட்டமைப்பு போன்றவைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சல் கிளினிக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. 9 தெற்கு மாவட்டங்கள் (தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர்) மாவட்டங்களில் மொத்தம் 17, 303 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,92,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70.89% பேர் தமிழகத்தில தரமான சிகிச்சையால் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட 9 தெற்கு மாவட்டங்களில் இதுவரை செய்யப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 3,99,098 ஆக உள்ளது.

கேரள மாநிலத்தில் இதுவரை மொத்தமாக 6,12,266 பேர் மட்டுமே பரிசோதனைச் செய்யப்பட்டுளளனர். அதேபோல் தெலுங்கானாவில் இது வரை 3,22,326 பேர் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

கேரளா, தெலுங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையை விட தெற்கு மாவட்டங்களில் நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.