Suriya Fans Helps to Peoples
Suriya Fans Helps to Peoples

100 நாட்களாக சூர்யா ரசிகர்கள் செய்து வரும் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Suriya Fans Helps to Peoples : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

நடிகராக மட்டுமல்லாமல் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கல்வி பயில வசதி இல்லாத பல ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று அவர்களின் கல்விக்கு வித்திட்டு வருகிறார்.

சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் இந்த ஊரடங்கில் அனைவரும் பாராட்டும் விதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

பிரபல இயக்குனருடன் இணைந்து வெப் சீரிஸில் நடிக்கும் சூர்யா – டைட்டில் இதுதான் !

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வீடில்லாமல் சாலைகளில் தவித்து வரும் மக்களுக்கு கடந்த 100 தினங்களாக மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்கி அவர்களின் பசியைப் போக்கி வருகின்றனர்.

சூர்யா ரசிகர்கள் இந்த செயல் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சூர்யாவிற்கு ஏற்ற ரசிகர்கள். அவரைப் போலவே இவர்களும் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருந்து வருகின்றனர் என பாராட்டி வருகின்றனர்.