Cook With Comali3 Update

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்குவது எப்போது என செஃப் தாமு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Cook With Comali3 Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் ரசிகர்கள் மத்தியில் முடிவுக்கு வர உள்ளது. இரண்டாவது சீசனின் பைனல் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் யார் இருப்பார் என்ற எதிர்பார்ப்பை காட்டிலும் நிகழ்ச்சி முடிந்து விடுகிறது என்ற சோகம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இப்படியான நிலையில் தற்போது செஃப் தாமு அளித்த பேட்டி ஒன்றில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என கூறியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இதன் மூன்றாவது சீசன் தொடங்கும். கோமாளிகளாக இரண்டாவது சீசனில் பங்கேற்றவர்கள் மீண்டும் பங்கேற்பார்கள் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.