ஸ்டார் ஹோட்டலில் ரூம் போடுங்க அப்போதான் கதையை கேட்பேன் என கூறி தயாரிப்பாளரை கடுப்பாகி உள்ளார் அஸ்வின்.

Cook With Comali Aswin in New Controversy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். ஏற்கனவே பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது நான் நாற்பது கதை கேட்டு தூங்கிவிட்டேன். எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூக்கம் வந்துவிடும். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்லப் போகிறாய் தான் என கூறினார். இவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet | HD

அதாவது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தங்களது தயாரிப்பில் அஸ்வினை வைத்து படம் ஒன்றை தயாரிக்க முன் வந்துள்ளது. இதற்காக அஸ்வினை அணுகியபோது அவர் குறிப்பிட்ட ஓட்டலில் குறிப்பிட்ட நம்பரில் வரும் போடுங்கள் அப்போதுதான் கதை கேட்பேன் என கூறியுள்ளார்.

ஹாக்கி தர்பார் : ஜப்பானை வீழ்த்தி, இந்தியா ஹாட்ரிக் வெற்றி; கள விவரம்..

தயாரிப்பு நிறுவனம் சரியான சொன்னபடி ரூம் போட்டு விட்டு காலையில் இருந்து மாலை வரை காத்துக் கொண்டிருந்தது. அஸ்வின் வராத காரணத்தினால் அவரை தொடர்பு கொண்டு பேசியபோது இன்னைக்கு கதை கேட்கும் மூடில் இல்லை நாளைக்கு மீட் பண்ணலாம் என கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அஸ்வினை வேண்டாம் என முடிவு செய்து வேறொரு நடிகரை தேர்வு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருப்பினும் வைரலான இந்த தகவலால் அஸ்வினை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி இருந்தால் சினிமாவில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் என அறிவுரை கூறி வருகின்றனர்.