Conjuring Kannappan Movie Review
Conjuring Kannappan Movie Review

கான்ஜூரிங் கண்ணப்பன் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் சதீஷ் ஹீரோவாக நடிக்க சரண்யா பொன்வண்ணன், ஆனந்த ராஜ், ரெஜினா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இயக்கியுள்ளார்.

படத்தின் கதைக்களம் :

கேமிங் துறையில் வேலை தேடி கொண்டிருக்கும் கதாநாயகன் சதீஷ் ஒரு நாள் தெரியாமல் சூனியம் செய்து வைத்திருக்கும் ட்ரீம் கேட்சியரில் இருந்து ரெக்கையை ஒன்றை எடுத்து விடுகிறார். இதனால் எப்போதெல்லாம் அவர் உறங்குகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு கனவு உலகத்தில் பேயிடம் சிக்கிக்கொள்கிறார்.

இதேபோல் அவருடைய குடும்பத்தை சேர்ந்த சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெடி கிங்ஸ் ப்ளே ஆகி வரும் எடுத்து இதே பிரச்சினையில் சிக்குகின்றனர். இதனால் அவர்கள் சந்திக்கும் விளைவுகள் என்ன அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பது தான் படத்தின் கதை.

YouTube video

படத்தை பற்றிய அலசல் :

எதார்த்தமான நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் சதீஷ். அதேபோல் சரண்யா பொன்வண்ணன் ஆனந்தராஜ் ஆகியோர் தங்களது அனுபவத்திற்கு ஏற்ற முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

ரெடின் கிங்ஸ்லியின் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

அறிமுக இயக்குனர் செல்வின் வித்தியாசமான த்ரில்லர் கதையை கையில் எடுத்து அதை திறம்பட கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

REVIEW OVERVIEW
கான்ஜுரிங் கண்ணப்பன் திரை விமர்சனம்
conjuring-kannappan-movie-reviewமொத்தத்தில் கான்ஜீரிங் கண்ணப்பன் கலக்கல் காமெடி த்ரில்லர்.