விக்ரம் நடிக்கப்போகும் சியான் 61 என்ற புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Chiyaan 61 Movie Title : விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ‘சியான் 61’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை கபாலி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்க கே ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தப் படத்திற்கு சியான் 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட நிலையில் இப்படத்திற்கு மைதானம் என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.