விஜய் நடிப்பில் 70-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா?

தளபதி விஜய்யின் 70-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கலாம் என சொல்லப்படுகிறது. இது பற்றிய நிகழ்வுகள் வருமாறு:
‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய விஜய் ‘தளபதி-69’ படத்திற்கு பிறகு, நடிப்பிலிருந்து விலக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்.
இருந்தாலும், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்களும் திரை பிரபலங்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவிக்கையில்,
‘விஜய் பிளான் பி ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன்படி, அரசியலில் இருந்துகொண்டே சற்று கேப் கிடைக்கும்போது, ஒரு படத்தில் நடிக்கலாம் என விஜய் நினைத்து வருவதாக… தான் கேள்விப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தன்னை வைத்து GOAT படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவிடம் ஒரு கதையை ரெடி செய்யும்படி விஜய் கூறியிருப்பதாகவும், ஒருவேளை ‘தளபதி-70’ திரைப்படம் நடந்தால் அதை வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளார் என தான் கேள்விப்பட்டதாகவும் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், ஒரு சில விஜய் ரசிகர்கள் இதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை. விஜய் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார், கண்டிப்பாக அவர் ‘தளபதி 69’ படத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து சொன்னது போல விலகி விடுவார் என சொல்கின்றனர்.
இருப்பினும், தளபதி 70 படத்தில் நடிப்பதாக இருந்தால், விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதான். அரசியல் களத்தில் நிகழும் பெருந் திருவிழா தான். ஆனால், இது அனைத்தும் விஜய்யின் கையில் தான் உள்ளது.
அவரின் முதல் இலக்கு ‘தளபதி 69’ படத்தை முடித்துவிட்டு 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டும். 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்க வேண்டும், என்பதே குறி..!
